தோழர் ப.ஜீவானந்தம்
நமது சமுதாயத்தில் பிறந்த தோழர் பா. ஜீவானந்தம் அவர்கள் (ஆகஸ்ட் 21, 1907 – ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் போற்றும் வகையில் அன்னாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாளிலும் நினைவு நாளிலும் மலரஞ்சலி செலுத்தி வருகிறது.