முனைவர் பி. யோகிஸ்வரன் அவர்களின் வாழ்த்துரை
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் புதிய ஓர் இணையதளம் (website)தொடங்க இருத்தலை அறிந்து மகிழ்கிறேன். அதன்மூலம் சங்கத்திற்கும் சமுதாய மக்களுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படும் ,சங்கத்தின் செயற்பாடுகளும் செய்திகளும் அங்கத்தினர்களைச் சென்று சேரவும் இந்த இணையதளம் பெரும் பயன் செய்யும்.
சமுதாய முன்னேற்றத்திற்கு அரும் பணிசெய்யும் தலைவர் ஐயப்பன் செயலாளர் சுந்தர் சுப்பிரமணியம் மற்றுமுள்ள செயற் குழுவினருக்கும் என் மனம் கனிந்த பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்.
தங்கள் செயல்திறன் மேலும் மேலும் ஓங்கிட நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
பி. யோகிஸ்வரன்
சென்னை
16.10.2021