வ . உ . சி . அவர்கள் பிறந்த நாள்

அமரர் வ . உ . சி . அவர்கள் பிறந்த நாள்
———————————-
நமது சமுதாய மாமனிதர் , இந்திய விடுதலைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகி , அமரர்
வ . உ . சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு இன்று 150 வது பிறந்த நாள்.
( 05.09.2021 – ஞாயிற்றுக்கிழமை )

அதனை முன்னிட்டு இன்று காலை 09.45 மணியளவில் சென்னை கடற்கரை சாலை , துறைமுகம் அருகில் அமைந்துள்ள வ . உ . சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவுருவ சிலைக்கு , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் , அமைச்சர்கள் பலரும் , அரசியல் கட்சி தலைவர்கள் திரு . G . K . வாசன் , திரு . தங்கபாலு , பல வெள்ளாளர் சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் மற்றும் பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் சார்பிலும் வ . உ . சி அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் , மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.

இந்நிகழ்வில் நமது கன்னியாகுமரி வெள்ளாளர் தலைமை சங்கத்தின் தலைவர் போரூர் திரு . A . அய்யப்பன் அவர்களும் , முன்னாள் தலைவர் மாதவரம் நாஞ்சில் மலர் திரு .
K . தானப்பன் அவர்களும் , துணைத்தலைவர் அம்பத்தூர்
S . கிருஷ்ண பிள்ளை அவர்களும் , பொதுச்செயலாளர் போரூர் திரு. சுந்தர் சுப்பிரமணியம் அவர்களும் , பொருளாளர் திருவொற்றியூர்
P . வேலப்பன் அவர்களும் , இளைஞரணி செயலாளர் அண்ணா நகர் R . உவரீஸ் குமார் அவர்களும் , அண்ணா நகர் கிளை சங்க செயலாளரும் , தலைமை சங்க செயற்குழு உறுப்பினருமான அண்ணா நகர் திரு A . பாலகிருஷ்ணன் அவர்களும் , தலைமை சங்க செயற்குழு உறுப்பினர் அண்ணா நகர் திரு . C . நடேஷ் அவர்களும் , தலைமை சங்க செயற்குழு உறுப்பினர் K . K . நகர் திரு . M . சபரீஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அன்புடன்

கன்னியாகுமரி வெள்ளாளர் தலைமை சங்க நிர்வாகிகள் ( சென்னை )

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *