நமது சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவது சம்மந்தமாக
நாஞ்சில் வெள்ளாள சமுதாய உறவுகளே!
நமது சங்கம் 1976-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 1977-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், நமது சங்கத்தின் முன்னோடிகளின் முயற்சியாலும், பல உறுப்பினர்களின் பங்களிப்பினாலும், 1978-ம் ஆண்டு 3150 சதுர அடி பரப்பளவு கொண்ட மனை அரும்பாக்கத்தில் நமது சங்கத்தின் பெயரில் வாங்கப்பட்டது.
அதன்பின், 1987-ம் ஆண்டு சங்க உறுப்பினர்கள் பலரது உதவியோடு கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில், கட்டிடத்தை கட்டி முடிக்க தேவையான பணம் இல்லாத காரணத்தால், நம் சங்க உறுப்பினர் ஒருவருக்கு குத்தகைக்கு விடப்பட்டு அந்த பணத்தை கொண்டு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. பின்பு, குத்தகைகாலம் முடிந்து குத்தகைக்கு விடப்பட்டிருந்தவரிடமிருந்து கட்டிடத்தை சங்க நிர்வாகிகள் தங்கள் வசம் எடுத்தபின் பழுது காரணமாக சீரமைக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வாடகைக்கு விடப்பட்டது.
இதனிடையில், வாடகைதாரர்கள் மாற்றம், அவ்வப்போது சிறு, சிறு பழுதுபார்க்கும் பணிகள் செய்தல் போன்றவையும் நடைபெற்றது. இந்த நிலையில், கட்டிடத்தின் சுவரில் வெடிப்பு மற்றும் மேற்கூரை சிமென்ட் பூச்சு அடர்ந்து விழும் சூழல் ஏற்படவே, வாடகைக்கு இருந்தவர் காலி செய்து விட்டார். இதன் காரணமாக, மேற்கொண்டு என்ன செய்யலாம் என, கட்டிட பொறியாளரை அழைத்து கட்டிடத்தை ஆய்வு செய்ததில், இதை சீரமைக்க முடியாது என்றும், இனி இக்கட்டிடத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொறியாளர் கூறிய காரணத்தால், கடந்த இரு வருடங்களாக கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருக்கிறது.
இதற்கு வருடந்தோறும், ரூ. 65000 மாநகராட்சிக்கு வரி செலுத்தி (சொத்துவரி, குடிநீர் வரி மற்றும் கழிவுநீர் வரி உட்பட) வருகிறோம். மேலும், வருடந்தோறும் சங்க பதிவை புதுப்பிக்க செலவு, மாதாந்திர கூட்டம் நடத்த செலவு, பொது உறுப்பினர்கள் கூட்டம் நடத்த செலவு, நம் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடக்கும் வெள்ளாளர் உட்பிரிவு சங்க கூட்டங்களில் நம் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள ஆகும் செலவு, 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும், நம் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஊக்கதொகை வழங்கும் செலவு, கிளைச்சங்கங்கள் நடத்தும் விழாக்களை ஊக்குவிக்க அவர்களுக்கு அளிக்கும் உதவித்தொகை மற்றும் மறைந்த நம் சமுதாய தலைவர்களின் பிறந்தநாள் & நினைவு நாட்களில் அவர்களை நினைவு கூறும் விதமாக உரிய மரியாதை செலுத்திட ஆகும் செலவு, வருடந்தோறும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி வரும் நாட்காட்டி அச்சடிக்க ஆகும் செலவு என பலவிதமான செலவுகள் செய்ய வேண்டியுள்ளது.
இத்தனையும், இதுவரை கட்டிடத்தின் மூலம் வாடகை கிடைத்து வந்ததால், செலவுகள் போக மீதி தொகையை வங்கியில் சேமிக்க முடிந்தது. ஆனால், தற்போது சங்கத்திற்கு எந்த வருமானமும் இல்லாத காரணத்தால், சங்க செலவினங்களை சமாளிக்க வழி தேட வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. ஒவ்வொரு செலவிற்கும், உறுப்பினர்களை எதிர்பார்த்து சங்கம் நடத்த இயலாது. சங்கத்திற்கு என ஒரு சிறிய அளவிலான நிரந்தர வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதோடு, நம் மூத்த சகோதர உறுப்பினர்கள் நம் சமுதாயத்திற்காக ஏற்படுத்தி தந்த இடத்தை பராமரித்து, பாதுகாப்பாக அடுத்த நம் சமுதாய தலைமுறை பயன்பெறும் வகையில், அவர்கள் கைகளில் ஒப்படைக்க வேண்டியது நம் கடமை என கருதுகிறோம். எனவே, நம் சங்கத்திற்கு ஒரு நிரந்தரமான அலுவலகம் தேவை என்பதாலும், மேலே குறிப்பிட்டுள்ள தேவையான செலவினங்களை கருத்தில் கொண்டும், நம் சமுதாய மக்களுக்கு பயன்படும் விதமாக, நாகர்கோவிலிருந்து ஏதேனும் அவசர பணி நிமித்தமாக சென்னை வரும் நம் சமுதாய உறவுகள் ஒருநாள் தேவைக்கு நம் சங்க கட்டிடத்தை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக செய்தால், அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், உறுப்பினர்கள் வீட்டு சிறு விஷேசங்களை (100 பேர் மட்டும் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள்) நம் சங்க கட்டிடத்தில் வைத்து நடத்தவும் இது போன்ற உறுப்பினர்களின் சிறு, சிறு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதித்தல் போன்ற நலத்திட்டங்களுக்கு ஒரு அரங்கத்தை புதிய கட்டிடத்தில் நிர்மாணிக்க எண்ணியுள்ளோம்.
எனவே, பழுதடைந்த பழைய கட்டிடத்தை இடித்து விட்டு, புதிய விரிவான கட்டிடம் கட்ட முனைந்துள்ளோம். இதுகுறித்து 2023-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில், அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி, சங்க செலவினங்களை சமாளிக்க, வாடகைக்கு விடும் வகையில் ஒரு தளமும், உறுப்பினர்கள் பயன்பாட்டிற்காக ஒரு தளமும், தரை தளத்தில் சங்க அலுவலகம் மற்றும் வாகனம் நிறுத்தமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது நம் சங்க வங்கி கணக்கில் ரூ.25 இலட்சம் வைப்புநிதி உள்ளது. கட்டிடம் கட்ட ஆகும் செலவு தோராய மதிப்பீடு ரூ.1.25 கோடி. இந்த தொகையை நம் சமுதாயத்தை சேர்ந்த தொழில் முனைவோர்கள் மற்றும் நம் சங்க உறுப்பினர்களிடமிருந்துதான், நன்கொடையாக பெற வேண்டியுள்ளது. எனவே, இத்திட்டம் நல்ல முறையில் நிறைவு பெற கொடையாளர்கள் மனமுவந்து கணிசமான தொகையை நன்கொடையாக அளித்து நம் சமுதாய பணிக்கு தங்களுடைய மேலான ஆதரவை நல்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஊர் கூடி தேர் இழுப்போம் வாரீர்!
22.12.2024, ஞாயிற்றுக்கிழமை அன்று அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நம் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற, ஆலோசர்கள், நிர்வாகிகள், நிர்வாககுழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள்:
- நம் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நன்கொடையாக ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மேல் வழங்கும் நம் உறவுகளின் புகைப்படம் நம் சங்க அலுவலகத்தில் இடம் பெறும்.
- ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அளிப்பவர்களின் பெயர்கள் சங்க கட்டிட கல்வெட்டில் பதிவு செய்யப்படும்.
- கட்டிடத்தை மூன்று தளங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது (தரைத்தளம் மற்றும் இரண்டு மேல்தளங்கள்) இதில், ஏதேனும் ஒரு தளத்தை நன்கொடையாளர்கள் கட்டி தந்தால், அத்தளத்திற்கு அவரது பெயர் வைக்கப்படும்.
- நன்கொடையாளர்கள் பணம் அல்லாது, கட்டுமான பொருட்களையும் தந்து உதவலாம்.
- அனைத்து நன்கொடையாளர்களின் பெயர்களும், சங்க கட்டிட திறப்பு விழா மலரில் இடம் பெறும்.
- நன்கொடை பெற்ற உடன் நன்கொடையாளர்களின் பெயர்கள் உடனுக்குடன் சங்க Website & WhatsApp-ல் பதிவேற்றம் செய்யப்படும்.
- நன்கொடைகளை, காசோலையாகவோ, சங்க QR Code மூலமாகவோ அல்லது சங்க வங்கி கணக்கிற்கு Net Banking வசதி மூலமாகவோ பணப்பரிமாற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
8 நன்கொடைகளை ரொக்கமாக தரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
- நீங்கள் அளிக்கும் நன்கொடைகள் சங்க வங்கி கணக்கில் சேர்ந்த உடன், ரசீது தயார் செய்யப்பட்டு, நிர்வாகிகள் மூலம் உங்களுக்கு வந்தடையும்.
Net Banking / Bank Details :
Name: KANYAKUMARI VELLALAR ASSOCIATION
Bank Indian Overseas Bank
Branch: Arumbakkam, Chennai
A/C No: 103601000007027Cheque / DD in the Name of :
UPI ID: 9840059798@iob
IFSC Code: IOBA0001036
KANYAKUMARI VELLALAR ASSOCIATION