கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க உறுப்பினர்கள் பார்வைக்கு…
நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம் கடந்த 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள நமது சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில், நிர்வாகிகள், நிர்வாகக்குழு மற்றும் பல செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். அக்கூட்டத்தில், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்டுவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு, விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் குறைந்த பட்சம் தலா ரூ.3000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம்.
ஒரு குடும்பத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால், அந்த குடும்பத்தார் சார்பில், குறைந்த பட்சம் ரூ.5000 ( ரூபாய் ஐந்தாயிரம் ) நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம்.
கூட்டு குடும்பத்தில், திருமணமான மகன் உறுப்பினராக இருக்கும் பட்சத்தில், அவர் தனி குடும்பமாக கருதப்படுவார்.
சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் குறைந்த பட்சம் ரூ.10000 (ரூபாய் பத்தாயிரம்) குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து) நன்கொடையாக அளிக்க வேண்டுகிறோம்.
அதிக அளவிலான நன்கொடைகள் அளிக்கும் நம் சமுதாய உறவுகள் அனைவரும், நம் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கௌரவிக்கப்படுவார்கள்.
நமது சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க தோராயமாக ரூ.1.25 கோடி தேவை.
மேலே குறிப்பிட்டுள்ள குறைந்த பட்ச தொகையை அனைத்து உறுப்பினர்களிடமிருந்து வசூலித்தாலும், அத்தொகையை கொண்டு கட்டிடத்தை முழுமையாக கட்டிட முடியாது. அதேசமயம், அதிக தொகையினை கட்டாயப்படுத்தி பெறவும் இயலாது. நம் மக்கள் தானாக முன்வந்து கணிசமான தொகையினை நல்கினால் மட்டுமே கட்டிடப்பணி முழுமையடையும்.
எனவே, வசதிபடைத்தோரும், தொழிலதிபர்களும், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றும் இளைய சமுதாயத்தினரும், சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டோரும் மனமுவந்து அதிக அளவில் நன்கொடையை அளித்து இச்சமுதாய பணியில் பங்கேற்க வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நன்றி!
இவண்
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்க புதிய கட்டிடப்பணி நிர்வாக குழு